வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

குழுவிற்கான மானியத் திட்டங்கள்

 

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்

செயல்படுத்தப்படும் பணிகள்
  • பதிவு செய்யப்பட்ட விவசாய குழுக்களுக்கான நிலநீர் ஆய்வின் அடிப்படையில் சமுதாய ஆழ்துளைக் கிணறுகளை உருவாக்குதல்.
  • சூரிய சக்கி / மின் சக்தி பம்பு செட்டுகள் அமைத்து கொடுத்தல்.
  • ஒவ்வொரு வயலுக்கும் நீரினைக் கொண்டு செல்வதற்கு நீர் விநியோக குழாய்கள் நிறுவுதல்.
  • தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்குதல்.
  • கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைப்பதற்கு மானியம் வழங்குதல்.
  • வேளாண் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் தனிப்பட்ட விவசாயிகளுக்கு  மானியத்தில் வழங்குதல்.
  • கிராம அளவிலான வேளாண் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைப்பதற்கு விவசாய குழுக்களுக்கு மானியம் வழங்குதல்.
மானியம்
  • சமுதாய நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கு 100% மற்றும் பல்வேறு ஒன்றிய அரசு திட்டங்களின் செயல்முறை வழிகாட்டுதலில் நிர்ணயித்துள்ள உச்சவரம்பு தொகைக்கு மிகாமல் மானியம் வழங்குதல்.
மேலும்...
 

முதலமைச்சரின் மானாவாரி நிலமேம்பாட்டு இயக்கம்

செயல்படுத்தப்படும் பணிகள்
  • நுண்ணிய நீர்ப்பிடிப்பில் நீர் அறுவடை நடவடிக்கைகள்
    • மானாவாரி தொகுப்புகளில் தனிப்பட்ட விவசாய நிலங்களில் மண் வரப்புகள் மற்றும் பண்ணைக்குட்டைகள் அமைத்தல்.
  • வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல்
    • மானாவாரி நிலங்களில்  சாகுபடிக்கேற்ப வேளாண் இயந்திரங்கள் மற்றும்   கருவிகள் கொண்ட வாடகை மையங்களை கிராம புறங்களில் அமைப்பதன்  மூலம் பண்ணை சக்தியை  அதிகரித்தல்.
    • வேளாண் இயந்திர சக்தி அதிகமாக உள்ள திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வாடகை மையங்கள் அமைத்தல்.
    • இப்பணிகள் வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டத்தின்கீழ் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.
  • வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைத்தல் 
    • வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்களை அமைக்க விவசாய குழுக்களுக்கு மானியம் வழங்குதல்.
    • இப்பணிகள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படவுள்ள ‘’வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைத்தல்’’ திட்டத்தின்கீழ் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும்.
மானியம்
  • நுண்ணிய நீர்ப்பிடிப்பில் நீர் அறுவடை நடவடிக்கைகள்
    • 100 % மானியம் வழங்குதல்.
  • வேளாண் இயந்திர வாடகை மையம் அமைத்தல்
    • கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைத்திட 80 % அல்லது அதிகபட்சம் ரூ.8 இலட்சம் மானியம் வழங்குதல் மற்றும் வட்டார அளவிலான வேளாண்இயந்திர வாடகை மையங்கள் அமைத்திட 40 % அல்லது அதிகபட்சம் ரூ.10 இலட்சம் மானியம் வழங்குதல்
  • வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைத்தல்
    • ஒரு மையத்திற்கு இயந்திரங்களின் விலையில் 50 % மானியம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 இலட்சம் வழங்குதல்
மேலும்...
 

பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் - ஒவ்வொரு வயலுக்கும் நீர் - நிலத்தடி நீர் பாசனம்.

செயல்படுத்தப்படும் பணிகள்
  • நில நீர் ஆய்வு செய்தல்
  • சமுதாய ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு, திறந்தவெளி கிணறு அமைத்தல்.
  • சூரிய சக்தி/ மின் சக்தி பம்பு செட்டுகள் அமைத்து கொடுத்தல். 
  •  மின் இணைப்பு வழங்குதல். 
  • நீர் விநியோக குழாய்கள் நிறுவுதல்.
மானியம்
  • ஒன்றிய அரசின் செயல்முறை வழிகாட்டுதலில் நிர்ணயித்துள்ள உச்சவரம்பு தொகைக்கு மிகாமல் மானியம் வழங்குதல்.
மேலும்...
 

வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிக்கும் மையம்

செயல்படுத்தப்படும் பணிகள்
  • வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிக்கும் மையம் அமைக்க மானியம் வழங்குதல்.
மானியம்
  • 50 % அல்லது அதிகபட்சமாக ரூபாய் நான்கு இலட்சம்.
மேலும்...
 

வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல்

செயல்படுத்தப்படும் பணிகள்
  • வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்குதல்.
மானியம்
  • அதிகபட்சமாக 40 % அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்குதல்.
மேலும்...
 

வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைத்தல்

செயல்படுத்தப்படும் பணிகள்
  • வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்களை அமைக்க விவசாய குழுக்களுக்கு மானியம் வழங்குதல்.
மானியம்
  • ரூ.10 இலட்சம் மதிப்பிலான வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்களை அமைக்க 50 % அல்லது அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் மானியம்.
மேலும்...
logo image