திட்டங்கள்
 
 

தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நதிப்பள்ளத்தாக்குத் திட்டங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்.

 
 
 
நிதியுதவி
 
 
மாநில அரசுத் திட்டம்.
 
 
பயனாளிகள்
 
 
தகுதி அளவுகோல் தென்பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட நீர்வடிப் பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர். (தருமபுரி, ஈரோடு,கிருஷ்ணகிரி)
வருமானம் வரம்பு இல்லை
வயது வரம்பு இல்லை
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை மண்வளப் பாதுகாப்புப் பணிகள் அரசின் 100% மானியத்தில் செயல்படுத்தப்படுகின்றன.
 
 
மற்ற விபரங்கள்
 
 
செயல்படுத்தப்படும் பணிகள்
  • ஓடை பராமரிப்புப் பணிகள்

  • வண்டல் சேகரிப்பு கட்டுமானங்கள்

  • நீர் சேகரிப்பு கட்டுமானங்கள்

 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
உதவி செயற் பொறியாளர், வே.பொ.து. நதிப்பள்ளத்தாக்குத் திட்டம் - அலகு 1,
210, சேலம் மெயின்ரோடு, ரகுபதி ஆஸ்பிடல் பின்புறம்,
கிருஷ்ணகிரி -635 001.
உதவி செயற் பொறியாளர், வே.பொ.து. நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், அலகு-2,
முதல் குறுக்குத் தெரு, 21/1, சீனிவாசா காலனி, கிருஷ்ணகிரி-635 001.ன
உதவி செயற் பொறியாளர், வே.பொ.து. நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், அலகு-1,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தர்மபுரி - 636 701.
உதவி செயற் பொறியாளர், வே.பொ.து. நதிப்பள்ளத்தாக்குத் திட்டம்,
காட்டூர் ரோடு, சுசீல் காடன், சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் 638 402
செயற் பொறியாளர், வே.பொ.து., நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், தர்மபுரி. கண்காணிப்புப் பொறியாளர், வே.பொ.து. சேலம்.
தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.
 
 
திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம்
 
 
நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
 
 
திட்ட நோக்கம்
 
 
  • நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைத்திடும் பொருட்டு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் அரிமானத்தை தடுத்தல்

  • நீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் நீர்பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல்

  • நீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரம் மற்றும் ஈரப்பதத்தினை மேம்படுத்துதல்

  • நீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரத்திற்கேற்றவாறு நிலப்பயன்பாட்டினை மேற்கொள்ளுதல்
��