திட்டங்கள்
 
 

முதல் நிலை பதன் செய்தல் மற்றும் மதிப்பு கூட்டுதலுக்காக சூரிய கூடார உலர்த்திகள் நிறுவுதல்

 
 
 
நிதி ஆதாரம்
 
 
மத்திய அரசின் பங்களிப்புத்திட்டம்
மத்திய அரசு -60 சதவீதம் , மாநில அரசு - 40 சதவீதம்
 
 
திட்டப் பகுதி
 
 
அனைத்து மாவட்டங்கள் ( சென்னை நீங்கலாக)
 
 
நோக்கம்
 
 
  • சூரிய சக்தி மூலம் சுகாதார முறையில், வேளாண் விளை பொருட்களை உலர வைப்பதன் மூலம் அறுவடைக்கு பின் பாதுகாப்பாக சேமிப்பு காலத்தை நீட்டித்தல்.
  • திறந்தவெளியில் உலர வைப்பதால் ஏற்படும் சேதாரத்தை குறைத்திடவும், சுகாதார முறையில் தரத்துடன் விளைபொருட்களை உலர்த்தி மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்திட வழி வகுத்தல்.
 
 
செயல்படுத்தப்படும் பணிகள்
 
 

விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு, தேங்காய், மிளகாய், முருங்கை இலை, வாழை, மா மற்றும் இலவங்கம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களை உலர வைத்திட, பசுமை குடில் வகையிலான, 400 முதல் 1000 சதுர அடி பரப்பு கொண்ட பாலிகார்பனேட் தகடுகளை கொண்டு, சூரிய கூடார உலர்த்திகள் அமைத்து தரப்படுகிறது.

 
 
மானியங்களும் சலுகைகளும்
 
 

ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு பரப்பளவு விகிதாசாரத்திற்கேற்ப, சூரிய கூடார உலர்த்திகள் அமைக்க ஏற்படும் செலவில் அதிகபட்சமாக 50 சதவீதம் அல்லது ரூ.1,60,000/- மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது ரூ.1,50,000/- அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

 
 
தகுதி
 
 

சூரிய கூடார உலர்த்திகள் அமைக்க இடம் வழங்கும் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள்.

 
 
திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம்
 
 
நிதியாண்டிற்குள்  செயல்படுத்தப்படும்.
 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)
மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.