திட்டம் சிறுபாசனத் திட்டம்
 
 
 
நோக்கம்
 

குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைத்திட தகுந்த இடங்களை தேர்ந்தெடுக்க புவியியல் ஆய்வு மேற்கொள்ளுதல்.

மணற்பாங்கான இடங்களில் குழாய் கிணறு அமைத்தல்

கடினப்பாறைப் பகுதியில் உபயோகமற்ற அல்லது வறண்டு போன திறந்த வெளி கிணறுகளில் வெடிவைத்தும், நேர் மற்றும் பக்கவாட்டு துளைகள் இட்டும் மீண்டும் கிணற்றினை உபயோகிக்க ஏற்பாடு செய்தல்.

 
செயல்படுத்தப்படும் பணிகள்
 
  • புவியியல் கருவி மூலம் புதிய குழாய் கிணறுகள் அமைக்க இடம் தேர்வு செய்தல்.
  • புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் கூடுதல் நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளுதல்.
  • தற்போதுள்ள பாசனப் பரப்பை நிலைப்படுத்துதல்.
 
கருவிகளின் வாடகை விவரம்
 
வ. எண். இயந்திரங்களின் பெயர் அலகு வாடகை விவரம் (ரூபாயில்)
1. பெர்குசன் துளைக் கருவி நாள் 300
2. சுழற்விசைத் துளைக் கருவி 8" ( 200 மி.மீ.) விட்டம் மீட்டர் 130
3. பாறை தகர்க்கும் கருவி ஒரு வெடிப்பு 250
4. கைத்துளைக் கருவி 6" (150 மி.மீ.) விட்டம் மீட்டர் 30
5. சிறு விசைத் துளைக் கருவி 6" (150 மி.மீ. ) விட்டம் மீட்டர் 70
6. நில நீர் ஆய்வுக் கருவி ஆய்வு 500
7. மின்னியல் ஆய்வுக் கருவி குழாய் கிணறு 1000
குறிப்பு: இயந்திரங்களின் வாடகைத் தொகை டீசலின் சந்தை விலைக்கேற்ப மாறுதலுக்குட்பட்டது.