சேவைகள் நில மேம்பாட்டுத் திட்டம்
 
 
 
நோக்கம்
 

விவசாய நிலங்களில்  நீர்ப்பாய்ச்சுதல் மற்றும் இதர விவசாய பணிகளை எளிதாகவும் திறமையாகவும் மேற்கொள்ளும் பொருட்டு நிலம் சமன்படுத்துதல் மற்றும் வடிவமைத்தல் போன்ற பணிகளை செயல்படுத்தி அதன் மூலம் விவசாயம் செய்வதற்கான நிலப்பரப்பை அதிகப்படுத்தி விவசாய உற்பத்தித் திறனைஅதிகரித்தல்.

விவசாயிகள் உரிய நேரத்தில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு கூடுதல் பண்ணை சக்தியை உருவாக்குதல்.

 
செயல்படுத்தப்படும் பணிகள்
 
  • நிலம் வடிவமைத்தல்
  • நிலம் சமன் செய்தல்
  • நிலச்சீரமைத்தல்
  • உழுதல், பரம்படித்தல்
  • நெல் கதிரறுக்கும் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்தல்
 
வாடகை விவரம்
 
  இயந்திரங்களின் பெயர் வாடகை விவரம் (ரூபாய் ஒரு மணி நேரத்திற்கு)
மண்தள்ளும் இயந்திரம் (Bulldozer) 840
உழுவை (Tractor) 340
கதிர் அறுவடை இயந்திரம் ( rubber track type) 1415
கதிர் அறுவடை இயந்திரம் (wheel type) 875
குறிப்பு: இயந்திரங்களின் வாடகைத் தொகை டீசலின் சந்தை விலைக்கேற்ப மாறுதலுக்குட்பட்டது.