திட்டங்கள்
 
 

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்

 
 
 
நிதியுதவி
 
 
உலக வங்கி நிதியுதவியுடன் மாநில அரசுத் திட்டம்
 
 
பயனாளிகள்
 
 
தகுதி அளவுகோல் தேர்வு செய்யப்பட்ட உப வடிநிலப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும்  தகுதியுடையவர்.
வருமானம் வரம்பு இல்லை
வயது குறைந்தது 18 வயது, உச்ச வயது வரம்பு இல்லை.
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை
சொட்டு மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் மத்திய அரசு வழிமுறைக்குட்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியம்; இதர விவசாயிகளுக்கு 75% மானியம்.
பண்ணைக் குட்டைகள் அமைத்தல் பொது பிரிவினருக்கு 90% மானியம் தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு 95% மானியம்.
நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல் (சமுதாய நிலங்களில்) 100% மானியம்
குழாய் பாசனம் அமைத்தல் 100% மானியம்
 
 
மற்ற விபரங்கள்
 
 
செயல்படுத்தப்படும் பணிகள்
  1. சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள் அமைத்தல்
  2. பண்ணை இயந்திரமயமாக்கல்
  3. பண்ணைக் குட்டைகள் அமைத்தல்
  4. நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்தல்
  5. குழாய் பாசனம் அமைத்தல்
  6. தகவல், கல்வி பரிமாற்றம் மற்றும் பயிற்சிகள் மூலம் திறமை வளர்த்தல்
 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)
மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.
 
 
திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம்
 
 
நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
 
 
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட தேதி
 
 
2007-08
 
 
செல்லுபடியாகும் காலம்
 
 
2015-16 (ஜூன் 2015 முடிய)
 
 
திட்ட நோக்கம்
 
 
  • ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் அதிக வருமானத்தை ஈட்டுதல்.

  • நீர் வீணாவதை குறைத்து நீர் உபயோகத் திறனை அதிகப்படுத்துதல்.

  • பயிர் உற்பத்தியை அதிகரிப்பதன்மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திடுதல்.