திட்டங்கள்
 
 

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம்.

 
 
 
நிதி ஆதாரம்
 
 
மாநில அரசு நிதி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி மற்றும் மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை திட்டம் (MNRE).
 
 
திட்டப் பகுதி
 
 
அனைத்து மாவட்டங்கள் ( சென்னை நீங்கலாக)
 
 
நோக்கம்
 
 
பாசன வசதிக்கான எரிசக்தி பாதுகாப்பினை உறுதி செய்தல்.
 
 
செயல்படுத்தப்படும் பணிகள்
 
 

பாசன வசதிக்காக சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை தனிப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குதல்.

 
 
மானியங்களும் சலுகைகளும்
 
 

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் (5ழஞமுதல் 10ழஞவரை) அமைக்க 90 சதவீதம் அரசு மானியமும் மீதமுள்ள 10 சதவீதம் விவசாயிகள் பங்களிப்பாகவும் பெறப்படுகிறது.

 
 
தகுதி
 
 

பாசன ஆதாரங்களுடன் (ஆழ்குழாய் கிணறு / திறந்தவெளி கிணறு / தரைநிலை நீர் தொட்டி) அமைந்துள்ள விவசாய நிலங்களைக் கொண்ட அனைத்து விவசாயிகள், பாசன ஆதாரத்தின் அருகில் சூரிய தகடுகள் நிறுவிட ஏதுவாக நிழலில்லா பரப்பு அமைத்திருக்க வேண்டும்.

 
 
திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம்
 
 
நிதியாண்டிற்குள்  செயல்படுத்தப்படும்.
 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)
மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.