சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள்
 
 
சூரிய சக்தி பம்பு செட்டுகள் (தானியங்கி சாய்மான வசதியில்லாதது)
 

சூரிய சக்தியால் இயங்கும் 5 குதிரைத் திறன் கொண்ட 500 ஏ.சி. பம்பு செட்டு அமைப்புகளை டெல்டா மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து 80 விழுக்காடு மானியத்தில் வழங்கும் வகையில் 2012-13ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 80 விழுக்காடு மானியத்தில், 50 விழுக்காடு மானியத்திற்கான தொகை தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழும், 30 விழுக்காடு மானியத்திற்கான தொகை மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் கீழும் வழங்க ஒப்பளிப்பு வழங்கப்பட்டது. இத்திட்டம் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுமை அளித்து செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு எரிசக்தி நிறுவனம் மூலம் இதற்குரிய ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு செய்து அதன் அடிப்படையில், 2013-14ஆம் ஆண்டு இத்திட்டத்தினை செயல்படுத்திட நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்டம் முடிவுறும் நிலையில் உள்ளது.

 
சூரிய சக்தி பம்பு செட்டுகள் (தானியங்கி சாய்மான வசதியுடன்)
 

2013-14 ஆம் ஆண்டில் 2000 எண்கள் 5 குதிரைத் திறன் கொண்ட சூரிய சக்தி பம்பு செட்டுகளை (4800 Wp திறனுடையதும் தானியங்கி சாய்மான வசதியுடன் கூடியதும்) அமைக்க விவசாயிகளுக்கு 80 விழுக்காடு மானியம் வழங்கும் பொருட்டு ரூ.80 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டது. இதில் 50 விழுக்காடு மானியத்தொகையான ரூ.50 கோடி தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழும், 30 விழுக்காடு மானியத்தொகையான ரூ.30 கோடி மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் கீழும் வழங்க ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மானியங்களை, எதிர்நோக்கி மாநில அரசு 80 விழுக்காடு மானியத்திற்கான தொகை ரூ.80 கோடியினை முன் பணமாக வழங்கியது. சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை வழங்கி நிறுவிட நிறுவனங்களையும் அதன் விலையினையும் ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் 2014 பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் கிணறுகள் திறந்த வெளி கிணறுகள் மற்றும் தரைநிலைத் தொட்டிகள் ஆகியவற்றில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்து தரப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் மற்றும் பங்களிப்பு பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

co