திட்டங்கள்
  வளம் குன்றிய நிலத்தை சீர் திருத்துதல்
 
 
 
நிதி ஆதாரம்
 
 
மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் 60:40 என்ற விகிதத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் உப திட்டம்.
 
 
திட்டப் பகுதி
 
 

காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்

 
 
நோக்கம்
 
 
பயிர் உற்பத்தியை உறுதி செய்வதற்கு களர் மற்றும் உவர் நிலங்களை சீர்திருத்துதல்.
 
 
செயல்படுத்தப்படும் பணிகள்
 
 
  1. நீர் ஆதாரம் உருவாக்குதல் (பண்ணை குட்டைகள்)

  2. தொடர் வடிகால் மற்றும் நிலமட்ட வடிகால்கள் அமைத்தல்

  3. நிலத்தின் தன்மைக்கேற்ப நிலம் சீர்திருத்தம் செய்தல்

  4. ஆழ உழுதல்

  5. சுழற்கலப்பை மூலம் வேளாண் கழிவுகள் மற்றும் பண்ணை உரங்களை நிலத்தில் சேர்த்தல்

  6. பசுந்தாள் உரம் சேர்ப்பதன் மூலம் கரிம கார்பன் அளவை அதிகரித்தல்

  7. எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் மற்றும் சிறு தானியங்கள் வழங்குதல்

  8. துத்தநாக சல்பேட் கலவையினை சேர்த்தல்

  9. பயிற்சிகள், திறன் வளர்த்தல் மற்றும் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை பராமரித்தல்
 
மானியங்களும் சலுகைகளும்
 
 

100 சதவீதம் மானியம்

 
தகுதி
 
 

காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள அனைத்து விவசாயிகள்

 
திட்ட செயலாக்க கால நிர்ணயம்
 
 

இந்த நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்

 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
உதவி செயற் பொறியாளர், வே.பொ.து, கடலூர், சிதம்பரம், ராமநாதபுரம், தென்காசி, சேரன்மாதேவி, மற்றும் திருநெல்வேலி செயற்பொறியாளர், வே.பொ.து. கடலூர், இராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி
கண்காணிப்பு பொறியாளர், வே.பொ.து. விழுப்புரம், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி. தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.