திட்டங்கள்
 
  நீடித்த நிலையான மானவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
 
 
 
நிதி ஆதாரம்
 
 
மாநில அரசுத் திட்டம்
 
 
திட்டப் பகுதி
 
 
கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி , அரியலூர், பெரம்பலூர் , தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, திருவள்ளூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் .
 
 
நோக்கம்
 
 

1000 எக்டர் நிலத்தொகுப்புகள் கொண்ட 1000 தொகுப்புகளில் உள்ள மானவாரி நிலங்களில், நீடித்த நிலையான வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.

 
 
செயல்படுத்தப் படும் பணிகள்
 
 
 1. மானவாரி நிலத்தொகுப்புகளில் நீர் சேகரிக்கும் கட்டமைப்புகள் (தடுப்பனைகள், கிராமக்குட்டைகள், சமுதாயக் குட்டைகள், நீர்அமிழ்வுக்குட்டைகள், ஊரணிகளை ஆழப்படுத்துதல்) அமைத்தல் போன்ற பணிகளை நுழைவு கட்டப்பணிகளாக மேற்கொள்ளுதல்.
 2. விவசாய நிலங்களில் வரப்பமைத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், இராமநாதபுரம் மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகள் மற்றும் சமுதாய குட்டைகளை ஆழப்படுத்துதல் போன்ற நீர் சேகரிப்பு கட்டுமானங்களை ஏற்படுத்துதல்.
 3. மானாவரி நிலங்களில் சாகுபடிக்கேற்ப வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்ட வாடகை மையங்களை கிராம புறங்களில் அமைப்பதன் மூலம் பண்ணை சக்தியை அதிகரித்தல்.
 4. வேளாண் உற்பத்தி அமைப்புகள் / வேளாண் உற்பத்தி குழுக்கள் மூலமாக வேளாண் பொருட்களுக்கான மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்ட அலகினை மானிய உதவியுடன் நிறுவுதல் மூலம் விவசாய பொருட்களின் மதிப்பினை அதிகரித்தல்.
 
 
மானியங்களும் சலுகைகளும்
 
 
 1. நுழைவு கட்டப் பணிகளுக்காக தொகுப்பிற்கு ரூ. 5 இலட்சம் மானியம் வழங்குதல் (100 சதவீதம்).
 2. தொகுப்பிற்கு ரூ. 7.50 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்தில் நீர் சேகரிப்பு கட்டமைப்பு நிறுவுதல் (100 சதவீதம்).
 3. கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைத்திட தொகுப்பிற்கு 80 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.8 இலட்சம் மானியம் வழங்குதல்.
 4. தொகுப்பிற்கு 75 சதவீதம் மானியத்தில் அல்லது அதிக பட்சமாக ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்ட அலகினை நிறுவுதல்.
 
 
தகுதி
 
 
 • மானாவாரி தொகுப்பில் உள்ள அனைத்து விவசாயிகள்.
 • தொகுப்பில் உள்ள பதிவு செய்யப்பட்ட விவசாய குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல்.
 • வேளாண் உற்பத்தி குழுக்கள் மற்றும் வேளாண் உற்பத்தி அமைப்புகளுக்கு மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்ட அலகினை நிறுவுதல்.
 •  
   
  திட்ட செயலாக்க கால நிர்ணயம்
   
   
  இந்த நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
   
   
  அணுக வேண்டிய அலுவலர்
   
   
  வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) செயற் பொறியாளர், வே.பொ.து, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம்.
  மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர்,
  வேளாண்மைப் பொறியியல் துறை,
  நந்தனம், சென்னை-600 035.
  தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.