வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கும் திட்டம்
 
 
நிலமேம்பாட்டுத்திட்ட இயந்திரங்கள்
 

நிலம் சமன்படுத்துதல், சீரமைத்தல் மற்றும் உழவுப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள, நிலமேம்பாட்டுத்திட்ட இயந்திரங்களான 90 புல்டோசர்கள் , 63 லேசர் நிலம் சமன்படுத்தும் கருவிகள், 171 டிராக்டர்கள் அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக துறையில் இயங்கிவருகின்றன. வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்காகவும் மேற்காணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதைத்தவிர 7 நெல் நடவு இயந்திரங்கள் மற்றும் 50 நெல் அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கிட துறையில் இருப்பில் உள்ளன. மாவட்ட வாரியாக வாடகைக்கு விடப்படும் இயந்திரங்கள் மற்றும் வாடகை விவரங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. 2014-15 ஆம் ஆண்டிலும் வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

 
சிறுபாசனத்திட்ட இயந்திரங்கள்
 

புதிய ஆழ்துளை குழாய்க்கிணறுகள் அமைத்தல், திறந்த வெளி கிணறுகளைப் புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள 30 சுழல்விசைத் துளைக்கருவிகள், 10 பெர்குஷன் துளைக்கருவிகள், 19 சிறு விசைத் துளைக்கருவிகள், 63 கைத்துளைக்கருவிகள், 7 நீள் துளைக் கருவிகள், 33 பாறை தகர்க்கும் கருவிகள் ஆகியவை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

நிலத்தடி நீர் இருப்பையும், கிணறு அமைப்பதற்கு ஏற்ற இடத்தையும் கண்டுபிடித்திடும் பொருட்டு 8 நிலத்தடி நீர் ஆய்வுக் கருவிகளும், 2 மின்னியல் ஆய்வுக் கருவிகளும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன

t"