திட்டங்கள்
 
 

இராமநாதபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட பண்ணை குட்டைகளை மேலும் ஆழப்படுத்துதல்.

 
 
 
தொடர்புடைய திட்டம்
 
 
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ( நபார்டு வங்கி உதவியுடன் )
 
 
நிதியுதவி
 
 
மாநில அரசுத் திட்டம்
 
 
பயனாளிகள்
 
 
தகுதி அளவுகோல் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மானாவாரி விவசாய நிலங்களை சொந்தமாகக் கொண்ட அனைத்து விவசாயிகள்.
வருமானம் பிரத்தியேக வரம்பு ஏதும்பு இல்லை
வயது வரம்பு இல்லை
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம்.
 
 
மற்ற விபரங்கள்
 
 
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 0.50 மீட்டர் ஆழம் வரை பண்ணைக்குட்டைகள் அமைத்தல்.

  • 0.50 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் பண்ணைக்குட்டைகளை ஆழப்படுத்துதல்.
 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)
மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.
 
 
திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம்
 
 
நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
 
 
திட்ட அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
 
 
2013-14
 
 
செல்லுபடியாகும் காலம்
 
 
2015-2016 நிதியாண்டு முடிய
 
 
திட்ட நோக்கம்
 
 
  1. பண்ணைக்குட்டைகளில் மழைநீர் சேகரித்தல்.

  2. வறட்சிக் காலங்களில் மானாவாரி பயிர்களுக்கு உயிர் பாசனம் அளித்தல்.

  3. பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற மானாவாரி பயிர்களின்உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்.