திட்டங்கள்
 
 

அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்.

 
 
 
நிதியுதவி
 
 
உலக வங்கி நிதியுதவியுடன் மாநில அரசுத் திட்டம்.
 
 
பயனாளிகள்
 
 
தகுதி அளவுகோல் குந்தா மற்றும் கிருஷ்ணகிரி நீர்த்தேக்க நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ளஅனைத்து விவசாயிகள்.
வருமானம் வரம்பு இல்லை
வயது வரம்பு இல்லை
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை 100% மானியத்தில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு பணிகள்.
 
 
மற்ற விபரங்கள்
 
 
செயல்படுத்தப்படும் பணிகள்
 • தடுப்பணை கட்டுதல்

 • கால்வாய் ஒழுங்குபடுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல்.

 • வண்டல் சேகரிப்பு குட்டைகள்.

 • கம்பி வலையுடன் கூடிய தடுப்பு சுவர் கட்டுதல்.

 • கம்பி வரையுடன் கூடிய படிமட்ட தாங்குசுவர் கட்டுதல்.

 • ஓடை பராமரிப்பு பணிகள்.

 • வண்டல் சேகரிப்பு கட்டுமானங்கள்.

 • நிலச்சரிவு தடுப்பு பணிகள்.
 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
உதவி செயற் பொறியாளர், வே.பொ.து. கிருஷ்ணகிரி, ஓசூர், உதவி செயற் பொறியாளர், வே.பொ.து. உதகமண்டலம், கூடலூர் மற்றும் நிலச்சரிவு குன்னூர்.
செயற் பொறியாளர், வே.பொ.து. கிருஷ்ணகிரி, உதகமண்டலம். கண்காணிப்புப் பொறியாளர், வே.பொ.து. சேலம், குன்னூர்.
தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.
 
 
திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம்
 
 
நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
 
 
திட்ட நோக்கம்
 
 
 • மண்வளப் பாதுகாப்பு பணிகள் மூலம் மண் தரம் குறைவதை தடுத்தல்.

 • நீர்த்தேக்கங்களில் வண்டல்மண் படிவதை குறைத்தல்.

 • மண் அரிமானத்தை தடுத்து, மண்வளத்தை பாதுகாத்தல்.
��