திட்டங்கள்
  நபார்டு நிதி உதவியுடன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சித்தாறு உப வடிநில பகுதிகளில் நீர்ப்பாசன கட்டமைப்புகளை புனரமைத்தல்
 
 
 
நிதி ஆதாரம்
 
 
நபார்டு நிதி உதவியுடன் கூடிய மாநில திட்டம்
 
 
திட்டப் பகுதி
 
 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம், கீழப்பாவூர், மானூர் மற்றும் மேலநீலிதநல்லூர் ஆகிய வட்டாரங்கள்.

 
 
நோக்கம்
 
 
 • நிலத்தடி நீர் தேக்கத்தினை செறிவூட்ட தகுந்த நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்துதல்

 • மானாவாரி பகுதிகளில் ஒருங்கிணைந்த மேலாண்மைப் பணிகள்

 • அனைத்து நிலங்களுக்கும் நீர் ஆதாரம் கிடைக்க வழி செய்தல்

 • சித்தாறு உப வடிநில பகுதிகளிலுள்ள சாகுபடி நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி உறுதிபடுத்துதல்

 
 
செயல்படுத்தப்படும் பணிகள்
 
 
 1. பண்ணை மேம்பாட்டு பணிகள்

 2. பாசனவாய்க்கால்கள் புதுப்பித்தல், கூடுதலாக கட்டுதல் மற்றும் நவீனப்படுத்துதல்

 3. நீர் ஈர்ப்பு பாசன குழாய்கள் அமைத்தல்

 4. புதிய பண்ணைக்குட்டைகள் அமைத்தல்

 5. புதிய நீர் சேகரிப்பு கட்டுமான பணிகள் அமைத்தல்

 6. நுண்நீர்ப்பாசனத்தை பெரும் அளவில் செயல்படுத்துதல்

 7. சூரிய சக்தியால் இயங்கும் மேட்டார் பம்பு செட்டுகள் அமைத்தல்

 8. கால்நடைகளுக்கு தீவன பயிர்கள் வங்கி அமைக்க ஊக்குவித்தல்

 
மானியங்களும் சலுகைகளும்
 
 

100 சதவீதம் மானியம்

 
தகுதி
 
 

சித்தாறு வடிநிலப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள்

 
திட்ட செயலாக்க கால நிர்ணயம்
 
 

2017-18 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2019-2020 ஆம் ஆண்டு முடிக்கப்படும். (மூன்றாண்டு திட்டம்)

 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
உதவி செயற்பொறியாளர், வே.பொ.து. திருநெல்வேலி, தென்காசி, சேரன்மாதேவி, உதவி செயற்பொறியாளர், பா. ப. மே. தி., சங்கரன்கோயில், அலகு 1, 2, வாசுதேவநல்லூர் அலகு 1 மற்றும் 2. செயற்பொறியாளர், வே.பொ.து. திருநெல்வேலி மற்றும் செயற்பொறியாளர், பா.ப.தி. & நீ.மே.தி., க.ந.நீ.பா.தி. , தென்காசி.
கண்காணிப்பு பொறியாளர், வே.பொ.து. திருநெல்வேலி தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.