திட்டங்கள்
  மத்திய அரசின் விரைவுப் பாசன நலத்திட்டத்தின்கீழ் பாசனப்பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டம்
 
 
 
நிதி அமைப்பு
 
 
மத்திய மாநில அரசு நிதியுதவியுடன் (செயல்படுத்தப்படுகிறது
 
 
நிதி ஆதாரம்
 
 
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் (50:50) செயல்படுத்தப்படுகிறது
 
 
பயனாளிகள்
 
 
தகுதி அளவுகோல் தேர்வு செய்யப்பட்ட பாசனப்பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகள்
வருமானம் வரம்பு இல்லை
வயது வரம்பு இல்லை
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை

பாசன வாய்க்கால் கட்டுமானப் பணிகள் ஒரு மீட்டருக்கு ரூ.835/- வீதம் ஒரு எக்டருக்கு 30 மீட்டர் நீளத்திற்கு 50% மத்திய அரசின் நிதி உதவி மற்றும் 50% மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
சுழற்சி முறை பாசனப் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.300/- வீதம் 100% மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும்.
நுண்ணீர் பாசனத்திற்கான உள்கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.50000/- வீதம் 50% மத்திய அரசின் நிதி உதவி மற்றும் 50% மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
நில வடிகால் அமைக்கும் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.6000/- வீதம் 50% மத்திய அரசின் நிதி உதவி மற்றும் 50% மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
பதிவு செய்யப்பட்ட பாசன சபைகளுக்கு திருந்திய வழிகாட்டுதலின்படி ஒரு முறை செயல்பாட்டு மானியமாக எக்டர் ஒன்றுக்கு ரூ.1200/- வழங்கப்படுகிறது.
(மத்திய அரசின் பங்கு ரூ.540/- மற்றும் மாநில அரசின் பங்கு ரூ.540/- வழங்கப்பட்டு பாசன சபையின் பங்காக ரூ.120/- வசூலிக்கப்படும்)

 
 
மற்ற விபரங்கள்
 
 

செயலாக்கப்படும் பணிகள்

  • பாசன வாய்க்கால்களில் கட்டுமானப் பணிகள் அமைத்தல்

  • சுழற்சிமுறை நீர்ப்பாசனப் பணிகள்

  • நுண்ணீர் பாசனத்திற்கான உள்கட்டமைப்புகள் அமைத்தல்

  • நில வடிகால் அமைப்புகள்

  • பண்ணை மேம்பாட்டு பணிகளில் செயலாக்கப்படும் கட்டுமானப் பணிகளின் பராமரிப்பிற்காக, நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கு ஒரு முறை செயல்பாட்டு மானியம் வழங்குதல் .
 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
உதவி செயற் பொறியாளர், வே.பொ.து.,
பாசனப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்.
மாவட்ட அளவில் உள்ள சம்மந்தப்பட்ட செயற் பொறியாளர், வே.பொ.து. மற்றும் செயற் பொறியாளர், வே.பொ.து., பாசனப் பகுதி மேம்பாட்டுத்திட்டம், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம்.
மண்டல அளவில் உள்ள சம்மந்தப்பட்ட கண்காணிப்புப் பொறியாளர், வே.பொ.து தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

 
 
திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம்
 
 
நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
 
 
திட்ட அறிமுகப்படுத்தப்பட்ட தேதி
 
 
1980-81
 
 
திட்ட நோக்கம்
 
 
  • பயிரிடும் பாசனப் பரப்பிற்கும், உருவாக்கப்பட்ட பாசன நீர்வளம் பெறத் தகுதியுடைய பரப்பிற்கும் உள்ள இடைவெளியை குறைத்தல்.

  • கால்வாய் பாசனப் பகுதிகளில் பாசன நீரின் பயன்பாட்டுத்திறனை மேம்படுத்துதல்

  • தலைமடை முதல் கடைமடை வரை பாசன நீரை சமமாக பகிர்ந்தளித்தல்

  • பாசன மேலாண்மையில் விவசாயிகளின் பங்கேற்பை உறுதி செய்தல்.

  • பாசன நீர் வீணாவதைத் தடுத்தல்