திட்டம்
 
 
மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைத் திட்டம்
 

தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்டங்களில் உள்ள நீர்வடிப்பகுதிகளில் மண்ணின் ஈரத்தன்மையை மேம்படுத்தி, அதிக பரப்பில் விவசாயம் மேற்கொள்ளும் பொருட்டு, தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள், பண்ணைக்குட்டைகள், புதிய கிராமக் குளங்கள், ஊரணிகள் மற்றும் செறிவூட்டும் குழாய் கிணறுகள் போன்ற மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைக்கட்டமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ், சமுதாய நிலங்களில் செயல்படுத்தப்படும் பணிகளின் பராமரிப்பிற்காக பயனாளிகளின் பங்காக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளிடமிருந்து 5 விழுக்காடு தொகையும், இதர விவசாயிகளிடமிருந்து 10 விழுக்காடு தொகையும் பெற்று, கிராம முன்னேற்ற சங்கம் அல்லது நீர்வடிப்பகுதி சங்கக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை சமுதாய நிலங்களில் அமைக்கப்படும் கட்டுமானங்களின் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும். பட்டா நிலங்களில், பட்டா நிலமாக இருந்தால், இத்திட்டப்பணிகள் 90 விழுக்காடு அரசு மானியத்திலும், பயனாளிகளின் பங்காக 10 விழுக்காடு (தாழ்த்தப்பட்ட / பழங்குடியின விவசாயிகளிடமிருந்து 5 விழுக்காடு) பணமாகவோ, பொருளாகவோ அல்லது மனித உழைப்பாகவோ பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.997.63 இலட்சம் செலவில் 908 மழைநீர்சேகரிப்பு கட்டமைப்புப்பணிகள் அமைக்கப்பட்டுள்ளன.