திட்டங்கள்
 
  தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பண்ணைசக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் கிராம அளவிளான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் நிறுவுதல்
 
 
 
 
நிதி ஆதாரம்
 
 
மத்திய அரசின் பங்களிப்புத்திட்டம்
மத்திய அரசு -60 சதவீதம் , மாநில அரசு - 40 சதவீதம்
 
 
திட்டப் பகுதி
 
 
பண்ணை சக்தி குறைவாக உள்ள மாவட்டங்கள்
 
 
நோக்கம்
 
 
  • அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் பயனை கிடைக்கச் செய்தல்.
  • கிராம அளவிலான பண்ணை இயந்திர மையங்களை நிறுவுவதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் கிடைப்பதை உறுதிசெய்தல்.
  • குறித்த நேரத்தில் வேளாண் பணிகளை சிக்கனமாக மேற்கொள்ளுதல்.
 
 
செயல்படுத்தப்படும் பணிகள்
 
 
  • பண்ணை சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் விவசாய குழுக்கள் / உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளிட்ட கிராம அமைப்புகள் மூலம் தலா ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கிராமஅளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை நிறுவுதல்.
  • குறைந்த பட்சம் 8 உறுப்பினர்களைக் கொண்ட விவசாய குழுக்களுக்கு, கிராமஅளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்க திட்ட மதிப்பீட்டில் 80 சதவீதம் மானியம் வழங்குதல்.
 
 
மானியங்களும் சலுகைகளும்
 
 
  • பண்ணை சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் மானாவாரி மற்றும் நெற்பயிர் சாகுபடிகேற்ற இயந்திரங்களை கொண்டு சாகுபடி செய்திட ஊக்குவிக்கும்பொருட்டு கிராமஅளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் நிறுவுதல்.
  • வேளாண்மைப் பொறியியல் துறையின் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள் குழுக்கள் / உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளிட்ட கிராம அமைப்புகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வகைகள் மற்றும் மாடல்களை விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம்.
 
 
தகுதி
 
 

பண்ணை சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் உள்ள விவசாய குழுக்கள் / உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளிட்ட கிராம அமைப்புகள்.

 
 
திட்ட செயலாக்க கால நிர்ணயம்
 
 
நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)
மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.