திட்டங்கள்
 
  தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அறுவடைக்குபின் செய்நேர்த்தி தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மைக்கான இயந்திரங்களை வழங்குதல்
 
 
 
 
நிதி ஆதாரம்
 
 
மத்திய அரசின் பங்களிப்புத்திட்டம்
மத்திய அரசு -60 சதவீதம் , மாநில அரசு - 40 சதவீதம்
 
 
திட்டப் பகுதி
 
 
அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)
 
 
நோக்கம்
 
 
  • அறுவடைக்குப்பின் சந்தைபடுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்பினை குறைத்தல், மற்றும் வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்கும் காலத்தை நீட்டித்தல்.
  • நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுதல் மற்றும் அனைத்து வகையான தோட்டக்கலை பயிர்கள், உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கான இயந்திரங்கள் மூலம் கிராமப்புற பகுதிகளில் வேலை வாய்ப்பு மற்றும் வருவாயை உருவாக்குதல்.
 
 
செயல்படுத்தப்படும் பணிகள்
 
 

அறுவடைக்குப்பின் செய்நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இயந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம், சிறுதானியங்களில் உமி நீக்கும் இயந்திரம், எண்ணெய் பிழியும் செக்குகள், பைகளில் அடைக்கும் இயந்திரங்கள், விசையால் இயங்கக்கூடிய உடைக்கும் இயந்திரங்கள், தோல் நீக்கும் இயந்திரங்கள், கதிரடிக்கும் இயந்திரங்கள், தோல் உரிக்கும் இயந்திரங்கள், பிரிக்கும் இயந்திரங்கள், கொதிக்க வைக்கும் இயந்திரங்கள், கழுவும் இயந்திரங்கள், அரைக்கும் இயந்திரங்கள், மெருகூட்டும் இயந்திரங்கள், சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் இயந்திரங்கள், சாய்வு வகையில் பிரிக்கும் இயந்திரங்கள், குறிப்பிட்ட புவியீர்ப்பு விசை பிரிப்பான்கள் போன்றவற்றினை அனைத்து தோட்டக்கலைப் பயிர்கள்/ உணவுப் பயிர்கள்/ எண்ணைய்வித்துப் பயிர்களுக்கு ஏற்றவாறு தனிப்பட்ட விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், விவசாய உபயோகிப்பாளர் குழுக்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் தொழில்முனைவோர்கள் வாங்குவதற்கு மானியம் வழங்குதல்.

 
 
மானியங்களும் சலுகைகளும்
 
 
  • அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி மற்றும் மேலாண்மை இயந்திரங்கள் வாங்குவதற்கு அதிகபட்சமாக 50 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
  • விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள் விவசாய உபயோகிப்பாளர் குழுக்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் ஆகிய ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 60 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

    ( இணைப்பு - 2 )

 
 
தகுதி
 
 

தனிப்பட்ட விவசாயிகள், சுய உதவி குழுக்கள், விவசாய உபயோகிப்பாளர் குழுக்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் ஆகிய பயனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள்.

 
 
திட்ட செயலாக்க கால நிர்ணயம்
 
 
நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)
மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.