திட்டங்கள்
 
  வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்
 
 
 
 
நிதி ஆதாரம்
 
 
மத்திய அரசின் பங்களிப்புத்திட்டம்
மத்திய அரசு -60 சதவீதம் , மாநில அரசு - 40 சதவீதம்
 
 
திட்டப் பகுதி
 
 
அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)
 
 
நோக்கம்
 
 
  • பண்ணை சக்தி குறைவாக உள்ள இடங்களில், சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல்.
  • வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்குதல்.
 
 
செயல்படுத்தப்படும் பணிகள்
 
 

வேளாண் இயந்திரங்கள்/கருவிகளான டிராக்டர் (8 முதல் 15 வரை பிடிஒ குதிரைத் திறன்), டிராக்டர் (15 முதல் 20 வரை பிடிஒ குதிரைத்திறன்), டிராக்டர் (20 முதல் 40 வரை பிடிஒ குதிரைத்திறன்), டிராக்டர் (40 முதல் 70 வரை பிடிஒ குதிரைத்திறன்), சுழற்கலப்பை (ரோட்டவேட்டர்கள்), பவர்டில்லர், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம் (4 வரிசை), விசைக்களையெடுப்பான், தட்டை வெட்டும் கருவி, புதர் அகற்றும் கருவி மற்றும் பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம் ஆகியவற்றினை தனிப்பட்ட விவசாயிகள் வாங்குவதற்கும், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைப்பதற்கும் மானியம் வழங்குதல்.

 
 
மானியங்களும் சலுகைகளும்
 
 
  • வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாங்குவதற்கு இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இதில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம்அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும் வழங்கப்படுகிறது.
  • விவசாயிகள் / விவசாயக் குழுக்கள் / தொழில் முனைவோர்கள் ஆகியோர்கள் வட்டாரஅளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் நிறுவுவதற்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
  • விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் / விவசாய சுய உதவிக்குழுக்கள்/ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் / இதுபோன்ற அமைப்புகளுக்கு கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை (மையம்) வங்கிகளை ஏற்படுத்திட 80 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
  • வேளாண்மை பொறியியல் துறையால் அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள், விவசாய குழுக்கள், தொழில் முனைவோர்கள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வகைகள் மற்றும் மாடல்களை விவசாயிகளின் விருப்பத்தின்படி தேர்வு செய்து கொள்ளலாம்.
 
 
தகுதி
 
 
  • தனிப்பட்ட விவசாய இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு -அனைத்து விவசாயிகள்.
  • வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் நிறுவுவதற்கு - விவசாயிகள்/ விவசாயக் குழுக்கள்/ தொழில் முனைவோர்கள்.
  • கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை அமைப்பதற்கு - விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் / விவசாய சுய உதவிக்குழுக்கள்/ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளிட்ட கிராம அமைப்புகள்.
  • முதலில் முழுத் தொகையை செலுத்துபவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
 
 
திட்ட செயலாக்க கால நிர்ணயம்
 
 
நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)
மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.